தல வரலாறு


சிதம்பரத்தில் சொர்ணபைரவர், செம்பியவரம்பல் கிராமத்தில் உமாமகேஸ்வர, கல்யாண சுந்தரேஸ்வர ரூபத்தில்,பைரவி உடனுறை ஸ்ரீ சொர்ணாகர்ஷன பைரவராக திகழ்கிறார்.

வலது பின்கரம் குபேர கலசமும், இடது முன்கரத்தில் அம்பிகையை அனைத்தபடி ஆலிங்கன கோலம், சொர்ண பைரவியும் வலது கரத்தை இறைவனின் வலது தோளில் வைத்து அனைத்தபடி ஈசனின் இடது தொடையில் அமர்ந்த கோலம்.

இடது பின்கரத்தில் நாகடமருகம், இடது தோளில் முத்தலை சூலம் சாய்ந்தவாறு, வலது முன்கரத்தால் அபயம் அருள்கிறேன் என நம்மைக்கண்டு புன்முறுவலுடன் சுகாசனத்தில் காட்சி தருகிறார்.

எண்திசை பைரவர்களுக்கும் உரிய வாகனத்துடன் நின்ற திகம்பரகோலம், சமபாத அளவில் நில்லாமல், நம்மைக்காத்தருள இருக்கிறேன் என ஒரு பாதத்தை மட்டும் முன் வைத்து நின்ற கோலம்.

நம் சொர்ணாகர்ஷன பைரவரிடம் மனமுருகி ஒருமனதாக உள்ளன்போடு வேண்டிடின், நினைப்பது நடக்கும் கேட்பது கிடைக்கும்.

அட்ட பைரவர்:

1. கல்வி, கலையை, அதன் மூலமாக வாழ்வாதாரம் தரக்கூடிய அஸிதாங்க பைரவர்.

2. கஜகேசரி யோகத்தையும், அரசு உத்தியோகத்தையும் தரக்கூடிய ருரு பைரவர்.

3. சத்ரு நாசகராகவும், வம்ச அபிவிருத்தியும் தரக்கூடிய சண்ட பைரவர்.

4. வெள்ளிக் கிழமைக்குரிய செல்வ செழிப்பினை, அதன் மேன்மையை தரக்கூடிய குரோதனர்.

5. பில்லி, சூன்யம், ஏவல்களை அழித்து வராகியின் கணவராக விளங்கும் உன்மத்தர்.

6. பிட்சாடணராக காசிக்கு வந்து அன்னபூரணியால் பிரம்ம கபாலம் நீங்கப்பெற்று அதுமுதல் காசியையே தனது இருப்பிடமாக கொண்டே நமக்கு தேஜசை தரும் கபால பைரவர்.

7. வம்பு வழக்குகளில் வெற்றியையும், சொந்தங்களிடையே வந்த சொத்து தகராரைப் போக்கியும் ஒற்றுமையைத்தர வல்லவராக பீஷ்ண பைரவர்.

8. பத்துவித ஆயுதங்களை பத்துக்கரங்களில் கொண்டு, ஈசான பாகத்தின் இறைவனாக, 'ஞமிலி' எனும் நாய் வாகனம் கொண்டு அஷ்டமி என்ற திதிக்கு உரியவராகவும் அஷ்ட ஐஸ்வர்யங்களை தரக்கூடியவராகவும், வாழ்வின் முக்தி நிலையில் அமைதியான ஆனந்தத்தையும் தந்து அருள்பவராகவும் விளங்குபவர் ஸ்ரீ சம்ஹார பைரவராவார்.

ஓம் நமோ பகவதே ஸ்வர்ணா கர்ஷண பைரவாய

தன தான்ய விருத்திகராய- சீக்கிரம் ஸ்வர்ணம்

தேஹி தேஹி வஸ்யம் குரு குரு நமஹ